Home இலங்கைசாதனைகள் படைத்த தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு

சாதனைகள் படைத்த தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு

by admin


உலகக்கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் அதிக கோல்களை போட்ட வீராங்கனையாக மீண்டும் உலக சாதனை படைத்த இலங்கையின் தர்ஜினி சிவலிங்கம் இன்றைய போட்டியுடன் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெறுகின்றார்

இங்கிலாந்தின் லிவர்பூலில் நடைபெறும் உலகக்கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் 15 மற்றும் 16 ஆம் இடங்களை தீர்மானிக்கும் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இலங்கை அணியும் சிங்கப்பூர் அணியும் போட்டியிட்ட நிலையில் இலங்கை அணி 78- 57 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற லீக் போட்டியொன்றிலும் இலங்கை அணி சிங்கப்பூரை 88 – 50 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது. இன்றைய போட்டியில் 77 கோல்களைப் போட்ட நட்சத்திர வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கம் கடந்த திங்கட்கிழமை சிங்கப்பூர் அணிக்கு எதிராக 76 கோல்களைப் போட்டு தானே படைத்த உலக சாதனையை இன்று மீணடு;:ம் புதுப்பித்தார்.

இது உலகக்கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரொன்றில் வீராங்கனையொருவர் பதிவு செய்யும் அதிகூடிய கோல்களாகும்.

தர்ஜினி சிவலிங்கம் இவ்வருட உலகக்கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் இதுவரையில் 271 கோல்களைப் போட்டு, தொடரில் அதிகூடிய கோல்களைப் போட்ட வீராங்கனையாகவும் பதிவாகியுள்ள தர்ஜினி சிவலிங்கம் இன்றைய போட்டியுடன் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெறுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது  #தர்ஜினி சிவலிங்கம்  #சர்வதேச #ஓய்வு #வலைப்பந்தாட்ட

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More