ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுக்குடி கரைமேடு கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக ஓ.என். ஜி.சி.யும், வேதாந்தா நிறுவனமும் மத்திய அரசிடம் மனு வழங்கிய நிலையில் அரியலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரியலூர் மாவட்ட விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தால் விவசாயம் பெரிதும் பாதிக்கும். எனவே அந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை இன்று வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படும் என பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் அறிவித்திருந்தது.
அதன்படி இன்று காலை அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுக்குடி கரைமேடு கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது #ஹைட்ரோ கார்பன் #கறுப்புக்கொடி #விவசாயிகள் #வேதாந்தா