அமெரிக்காவில் நெவேடா மாகாணத்தில் உள்ள அதிகபட்ச ரகசிய இடமான ஏரியா 51 அருகில் மக்கள் செல்லக் கூடாது என அமெரிக்க விமானப் படை தெரிவித்துள்ளது. 51ல் அத்துமீறி நுழைவதற்கான முகநூல் நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பம் செய்திருந்த நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏரியா 51 என்பது அமெரிக்க விமானப் படையின் திறந்தவெளிப் பயிற்சி முகாம் ஆகும். அந்தவகையில் அமெரிக்க ஆயுதப் படையினருக்குப் பயிற்சி அளிக்கும் பகுதிக்கு வர யாரும் முயற்சித்தால் அதை தாங்கள் தடுத்து நிறுத்துவோம் என செய்தித் தொடர்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அங்கு வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதாக சிலர் நம்புகின்ற நிலையில் வேற்று கிரகங்களில் உயிரினங்கள் இருப்பது பற்றியும், வேற்றுக்கிரக பறக்கும் சாதனங்கள் பற்றி அமெரிக்க அரசிடம் தகவல்கள் உள்ளதாகவும், மக்களிடம் தெரிவிக்காமல் அவற்றை மறைத்து வைத்திருப்பதாகவும் சிலர் கருதுகின்றனர்.
2013 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட – ஏரியா 51 முகாமில் – பிடிபட்ட வேற்றுகிரகவாசிகள் வைக்கப்பட்டுள்ளனர் – அவர்களுடைய தொழில்நுட்பமும், பறக்கும் வாகனமும் அங்கே வைக்கப்பட்டிருக்கின்றன எனவும் அவர்கள் கருதிவருகின்றனர். எனினும் அமெரிக்க அரசு இதனை மறுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #ஏரியா 51 #மக்கள் #செல்லக் #அமெரிக்க #விமானப் படை, #வேற்றுகிரகவாசிகள்