போராட்டங்களை குழப்பும் வகையில் கோயில்கள் ஆக்கிரமிக்கப்படுவது உள்ளிட்ட பல பிரச்சினைகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட சங்கத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து தெரிவித்த லீலாதேவி ஆனந்தநடராஜா, 879 நாளாக தமது தொடர் போராட்டம் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார். எனினும் இன்றுவரை தமது நிலை தொடர்பாக தீர்வு வழங்குவதற்கு எவரும் முன்வரவில்லை. இதுவரை 30 பேர்வரை தமது பிள்ளைகளை காணாதவர்களாக உயிரை மாய்த்துள்ளனர் எனவும் கவலை வெளியிட்டுள்ளார்.
வடக்கில் உள்ள தமிழ் தலைமைகள் ஒன்றுபட்டு ஒரே அணியாக தேர்தலில் களம் இறங்க வேண்டும். விட்டுக்கொடுப்புக்களை செய்ய வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏமாற்றிவிட்டது. அவர்கள் தமது சுயநலம் சார்ந்து செயற்படுகின்றனர். இந்த நிலையில் தமது பிள்ளைகளின் விடிவிற்காகவும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்தும் பேசுவதற்கு ஓர் பொது அணி தேவைப்படுகின்றது. அவ்வாறு அனைத்து தரப்பும் ஓரணியில் திரண்டு செயற்படுவதே பொருத்தமானது எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார். #காணாமல்ஆக்கப்பட்டவர்களின்உறவினர்கள் #கிளிநொச்சி #தமிழ்தேசியகூட்டமைப்பு