Home இலங்கைதனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…

தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…

by admin


தமிழ் அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சட்டத்தரணிகள் முன்வராத காரணத்தால் தன்னுடைய வழக்கை தானே வாதாடிய குறித்த கைதி, வழக்கிற்கான ஆதாரங்களைத் திரட்டுவதற்காக பிணை கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். இதேவேளை தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் யாவரும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் எனவும் அவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலங்கள் யாவும் சித்திரவதை மூலம் பெறப்பட்டவை எனவும் யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் தலைவர் அருட்தந்தை மங்களராஜா அடிகளார் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். #கனகசபைதேவதாசன் #உண்ணாவிரதப்போராட்டம் #தமிழ்அரசியல்கைதி

Spread the love
 
 
      

Related News

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More