மலையத்தில் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் வறட்சி காரணமாக் காட்டு தீ ஆங்காங்கே பரவி நூற்றுக்கணக்கான ஏக்கர் காடுகள் தீ பற்றி எரிகின்றது. இதனால் வறட்சி நிலை அதிகரித்துள்ளதுடன் இயற்கை அழகும் சீர் குலைந்து வருகின்றது.
மிகவும் அரிய வகை தாவரங்களும்¸ உயிர் இனங்களும் அழிந்த வருகின்றது எனவும் இவை அதிகரிக்கும் பட்சத்தில் மலையகத்தில் மேலும் வறட்சி அதிகரிக்கலாம் எனவும் இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
காட்டு தீ இயற்கையாகவே சில இடங்களில் ஏற்படுகின்ற போதிலும் பெரும்பாலான இடங்களில் விசமிகளால் தீ வைக்கப்படுவதாக காவல்துறையினருக்கு புகார்கள் கிடைத்தள்ளதாகவும் தகவல்கள் தெளிவாகியுள்ளன.
இந் நிலையில் மலையத்தில் காட்டு தீ பரவுவதையும் அதனை தடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்க் கொள்ள வேண்டியது கட்டாயமான ஒன்றாக இருக்கின்றது.
இந் நிலையில் இன்று (5) காலை புஸ்ஸல்லாவ காவல்துறை பிரிவிற்குட்பட் வகுகபிட்டிய காட்டுமாரி அம்மன் ஆலய பிரதேசத்தில் 20 ஏக்கர் கொண்ட காட்டு பிரதேசம் முற்றாக தீக்கு இரையாகி உள்ளதனால் பிரதேசத்தின் இயற்கை அழகு குன்றி காணப்படவதுடன் பல உயினங்களும் இறந்துள்ளன.
இதனை அணைப்தற்கான எந்த ஒரு நடவடிக்கைகளையும் யாரும் முன்னெடுக்கவில்லை எனவும் இந் நிலை மலையத்தில் அதிகரிக்குமானால் இன்னும் பல நூற்றுக்கணக்கான காடுகள் உட்பட சொத்துக்கள் இழப்பு உயிரினங்களின் இழப்பு அதிகரிக்கும் என்பதில் ஐயம் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.