கடந்த ஜூலை 15ஆம் திகதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்த சந்திரயான் 2 விண்கலம் திடீரென சில தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக அன்றையதினம் ஏவப்படாத நிலையில் இன்று மதியம் 2.43 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது
நேற்று மாலை 6.43 மணிக்கு 20 மணி நேரத்துக்கான கவுன்டவுன் ஆரம்பமாகியுள்ளதாபகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக 978 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்யப்பட்டு விட்டதாகவும், நல்லபடியாக சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படும் எனவும் இஸ்ரோ தலைவர் சிவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, ரஸ்யா உள்ளிட்ட நாடுகள் நிலவில் ஆய்வுகளை மேற்கொண்டாலும் இதுவரை எந்த நாடுமே நிலவின் தென்துருவத்தில் களமிறங்கவில்லை என்கின்ற நிலையில் நிலவின் தென்துருவ மண்டலத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 ஏவப்படுகிறது.
நிலவை மேலும் புரிந்துகொள்ளவும், இந்தியாவுக்கும் மனித சமுதாயத்துக்கும் பயனளிக்கும் வகையில் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளவும் முயல்கிறோம். எதிர்காலத்தில் நிலவை ஆய்வு செய்ய மேற்கொள்ளப்படும் பயணங்களில் நமது கண்டுபிடிப்புகள் மாற்றத்தை ஏற்படுத்தும் என இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது #சந்திரயான் 2 #விண்கலம் #விண்ணில் #இஸ்ரோ