Home உலகம்போர்த்துக்கல்லில் பல இடங்களில் காட்டுத்தீ – 8 பேர் காயம்

போர்த்துக்கல்லில் பல இடங்களில் காட்டுத்தீ – 8 பேர் காயம்

by admin


மத்திய போர்த்துக்கல்லில் பல இடங்களில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பலர் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்த்துக்கல்லின் மத்திய பகுதியில் உள்ள காஸ்டெலோ பிரான்கோ என அழைக்கப்படும் அந்த மலைப் பிராந்தியத்தில் மூன்று இடங்களில் தீ ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீயில் பொது மக்களில் ஒருவருக்கும், ஏழு தீயணைப்பு வீரர்களுக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சனிக்கிழமை பரவ ஆரம்பித்த காட்டுத்தீ நேற்று ஞாயிற்றுக்கிழமை இரண்டு இடங்களில் கட்டுக்குள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ராணுவத்தினரும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதுடன் பல முக்கிய வீதிகள் மூடப்பட்டுள்ளதாகவும் காயமடைந்தவர்கள் ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது

இதேவேளை போர்த்துக்கல்லின் மத்திய மற்றும் தெற்கு பகுதியில் ஆறு இடங்களில் அதிகபட்சமாக தீ ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்pபடத்தக்கது  #போர்த்துக்கல் #காட்டுத்தீ  #காயம் #தீயணைப்பு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More