Home இலங்கைசாவதற்குள் எமது பிள்ளைகளை விடுதலை செய்யுங்கள் – வவுனியாவில் கண்ணீர்ப் போராட்டம்

சாவதற்குள் எமது பிள்ளைகளை விடுதலை செய்யுங்கள் – வவுனியாவில் கண்ணீர்ப் போராட்டம்

by admin


நாம் சாவதற்குள் எமது பிள்கைளை விடுதலை செய்யுங்கள் என்று தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தனர். வவுனியாவில் தொடர்ந்து இன்றுடன் 884ஆவது நாட்களாக சூழற்ச்சி முறையில் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தில் அரசியல் கைதிகளில் விடுதலையை வலியுறுத்தி அவர்களின் விடுதலையை மக்கள் குரல் எழுப்பினர்.

இன்று இடம்பெற்ற இப்போராட்டத்தில் நீண்ட காலமாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய்யுமாறும் அமெரிக்காவே சிங்கள ,பௌத்த ஒடுக்கு முறையிலிருந்து தமிழர்களை விடுவிக்க உன் உதவி தேவை என்றும் மக்கள் கோசங்களை எழுப்பினர்.

எங்கள் உயிர் பிரிவதற்கு முன்பு எமது பிள்ளைகளை எங்களிடம் விடுவிக்கவும் , தமிழ் அரசியல் கைதிகளுக்கான விடுதலை என்றால் அது மரணமா? போன்ற  வாசகங்களைத் தாங்கியவாறும் கதறி அழுது, கண்ணீர்விட்டு தமது போராட்டத்தினை மேற்கொண்டனர்.

இப்போராட்டத்தினை முன்னெடுத்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை விடுவிக்கக் கோரியும் கடந்த 884 நாட்களாக தமது தொடர் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.சாவதற்குள் எமது பிள்ளைகளை விடுதலை செய்யுங்கள் – வவுனியாவில் கண்ணீர்ப் போராட்டம் #சாவதற்குள்  #பிள்ளைகளை #விடுதலை #வவுனியா #போராட்டம்

 
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More