மக்களவையில் இடம்பெற்ற அமளிக்கு இடையே தகவல் அறியும் உரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-இன் பிரிவு 13 மற்றும் 16 இந்த மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. முன்னர் இந்தச் சட்டத்தின் பிரிவு 13 மத்திய தகவல் ஆணையாளர் மற்றும் தகவல் ஆணையாளர்களின் பதவி காலத்தை 5 ஆண்டுகளாக அல்லது 65 வயது வரை என நிர்ணயித்திருந்தது.
இந்த திருத்தப்படி, ஆணையாளரின்; பதவிக்காலம், ஐந்து ஆண்டுகள் என்பதில் இருந்து, மூன்று ஆண்டுகளாக குறைக்கவும், ஊதியம் உள்ளிட்ட வி;யங்களை முடிவு செய்யும் அதிகாரம் மத்திய அரசின் கைகளில் ஒப்படைக்கப்படும்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை தகவல் அறியும் உரிமை சட்டத்தை நீர்த்து போக செய்வதுடன் தகவல் ஆணையகத்தின் சுதந்திரமான செயல்பாட்டை சீர்குலைக்கும். எனவே இந்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடதத்க்கது #தகவல் அறியும் உரிமை #திருத்த #மசோதா #நிறைவேற்றம் #மக்களவை