Home பிரதான செய்திகள்இமாம் உல் ஹக், காதலித்து ஏமாற்றியதாக, 8 இளம்பெண்கள் முறைப்பாடு…

இமாம் உல் ஹக், காதலித்து ஏமாற்றியதாக, 8 இளம்பெண்கள் முறைப்பாடு…

by admin

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வீரர் இமாம் உல் ஹக், தம்மை காதலித்து ஏமாற்றியதாக 8 இளம்பெண்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்த பாகிஸ்தானின் இளம் வீரரான இமாம் உல் ஹக், சில பெண்களுடன் மேற்கொண்ட வட்ஸ் அப் உரையாடல்களை ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். குறித்த வட்ஸ் அப் உரையாடல்களில் இமாம் அந்த பெண்களிடம் காதலிப்பதாக தெரிவித்துள்ளார். அத்துடன் இமாம், பெண்களின் புகைப்படங்களையும் கேட்டுள்ளார். பின்னர் நான் உன்னை காதலிக்கிறேன். ஆனால், என்னால் திருமணம் செய்துகொள்ள முடியாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பாகிஸ்த்தான் கிரிக்கட் தரப்பில் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளன.  இமாம் உல் ஹக், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இன்சமாம் உல் ஹக்கின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More