Home உலகம்அமெரிக்க கூட்டுப்படையின் வான்வழி தாக்குதலில் 20 தலிபான்கள் பலி…

அமெரிக்க கூட்டுப்படையின் வான்வழி தாக்குதலில் 20 தலிபான்கள் பலி…

by admin


ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 தலிபான்கள் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்களை ஒடுக்குவதற்காக அந்நாட்டு அரசுடன் இணைந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர்.இதனையடுத்து, போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமெரிக்கா தலைமையில் தலிபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக இந்த பேச்சுவார்த்தை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் கஜினி மாகாண காராபாக் மாவட்டத்தில் சையது வாலி மற்றும் மர்வார்டா ஆகிய பகுதிகளில் அமெரிக்க கூட்டுப்படை நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 20 தலிபான்கள் கொல்லப்பட்டனர் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More