அரியானா மாநிலம் அம்பாலா மத்திய சிறையில் உள்ள 19 கைதிகளுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது இவ்வாறு 19 கைதிகளுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தற்போது அவர்கள் அனைவரும் சண்டிகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனையடுத்து சிறைக்கு புதிதாக வரும் கைதிகள் எச்.ஐ.வி. பரிசோதனை நடத்திய பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள சிறை அதிகாரிகள் எச்.ஐ.வி. குறித்த விழிப்புணர்வு முகாம்களும் சிறைக்குள் நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். #அரியானா #சிறை #கைதிகளுக்கு #எச்.ஐ.வி. #விழிப்புணர்வு