அடுத்துவரும் தோ்தல்களின் மக்கள் தமக்கு ஆணை வழங்க தவறினால் அரசியலில் இருந்து நிரந்தரமாக ஓய்வு பெறலாம் என நினைப்பதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளா் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மக்கள் ஆணை வழங்காமல் வலிந்து கிழட்டு அரசியல் செய்யும் விருப்பம் அல்லது தேவை தனக்கில்லை எனவும் அவர் கூட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சிய அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இலங்கை தமிழர்களின் இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியா 13 ஆவது திருத்தச் சட்டத்தை மட்டும் முழுமையாக நடைமுறைப்படுத்தினால் போதும் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளது.
இந்தியாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்த போதிலும் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை என்பதுடன் எதிர்காலத்திலும் இதில் மாற்றங்கள் ஏற்படாது. அண்மையில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடா்பான இனப்பிரச்சினை விடயத்தில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துங்கள் என இலங்கை அரசிற்கு இந்தியா வலியுறுத்தியிருந்தது.
அதனாலேயே மோடியும் கூட்டமைப்பினரை சந்திகக அழைக்கவில்லை. இவர்களும் அங்கு சென்று அவரை சந்திப்பதற்கு தயங்குகின்றனர். தாம் அன்றிலிருந்து இன்றுவரை 13 ஆவது திருத்தச் சட்த்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி வருவதாகவும், இந்த நிலையிலேயே தமது கோரிக்கை யதார்த்தமானது என்பதனால், தமது கொள்கை பயனங்கள் சரியென தமிழ் மக்கள் தற்பொழுது உணரத் தொடங்கியுள்ளதாகவும், டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.