Home இலங்கைநாமல் ராஜபக்ஸ யாழ் சென்றுள்ளார்….

நாமல் ராஜபக்ஸ யாழ் சென்றுள்ளார்….

by admin

பாறுக் ஷிஹான்

ஒன்றிணைந்த எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ யாழ் நாகவிகாரைக்கு  சென்றுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு திங்கட்கிழமை (29) பயணம் மேற்கொண்டுள்ள ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ  குழுவினர் காலை 10 மணியளவில் நாகவிகாரை விகாராதிபதி வண மீகஹ யதுரே ஸ்ரீ விமல தேரரை சந்தித்து கலந்துரையாடியதுடன் ஆசிர்வாதத்தையும் பெற்று கொண்டனர். இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் ஸ்ரீ பொதுஜ‌ன‌ பெர‌முன‌ க‌ட்சி யாழ் மாவட்ட முக்கியஸ்தர்கள் இவ்விஜயத்தின் போது உடனிருந்தனர்.

மேலும் இன்று யாழ் ஆயர் இல்லம், நல்லூர் ஆதின குரு முதல்வர், முஸ்லிம் மக்கள் தரப்பு , விளையாட்டு கழகங்கள், யாழ் வணிகர் கழகம் என்பவற்றுடன் சந்திப்பில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வடமராட்சி அங்கஜனின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் மக்கள் மன்றம் ஒன்றும் அங்குரார்பணம் செய்யப்படவுள்ளது. இந்த நிகழ்வு பிற்பகல் 2.00 மணிக்கு வல்வெட்டி விநாயகர் வித்தியாலய மைதானத்தில் (வல்வெட்டி அலுவலகம் முன்பாக) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More