Home இலங்கைசஹ்ரானின் மனைவியின் சகோதரர் கைது

சஹ்ரானின் மனைவியின் சகோதரர் கைது

by admin


உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான மொஹமட் சஹ்ரானின் மனைவியின் மூத்த சகோதரரான 28 வயதுடைய மொஹமட் அப்துல் காதர் அசிம் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் நுவரெலியாவில் இயங்கிவந்த சஹ்ரான் ஹாசிமின் பயிற்சி முகாமில் ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளதுடன் பயங்கரவாத குழுவிற்கு உதவிகள் வழங்கியுள்ளதாகவும் ஏற்பட்டுள்ள சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது

சந்தேக நபர் நுவரெலியாவின் கட்டுபெத்த பகுதியில் வைத்து நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #சஹ்ரான்  #மனைவி #சகோதரர்  #கைது #உயிர்த்த ஞாயிறு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More