பாணந்துறை, பின்னவத்த பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு மத்தோகொட பகுதியில் வான் ஒன்றை திருடிச் சென்றமை தொடர்பில் குறித்த வானின் உரிமையாளர் மத்தோகொட காவல் நிலையத்தில் முறைப்பாடுசெய்திருந்தார்.
இதனையடுத்து திருடப்பட்ட வானில் பொருத்தப்பட்டிருந்த ஜீ.பி.எஸ். உபகரணத்தினை அடிப்படையாகக் கொண்டு வானை பின் தொடர்ந்து சென்ற காவல்துறையினர் இராணுவத்தினருடன் இணைந்து குறித்த வானை வீதி தடையில் நிறுத்த முற்பட்டபோது அந்த வானில் பயணித்தவர்கள் இராணுவத்தினர் இருவர் மீது மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து குற்றத்தடுப்பு பிரிவினர் பாணந்துறை பகுதியில் வைத்து குறித்த வானை னை மடக்கிப் பிடித்த சந்தர்ப்பத்தில் சந்தேக நபர்கள் இருவரும் தப்பிச் செல்ல முற்பட்ட போது அவர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காயமடைந்த ஒருவர் தப்பிச் சென்றுள்ளதுடன் மற்றையவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த hகவல்துறையினர் தப்பிச் சென்ற சந்தேக நபரையும் கைதுசெய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. #இராணுவத்தினரின் #துப்பாக்கி #உயிரிழப்பு #பாணந்துறை