பாராளுமன்றத்தில் இன்று அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும், தீர்மான வரைவு முன்வைக்கப்படவுள்ளது. அமைச்சரும், சபை முதல்வருமான லக்ஸ்மன் கிரியெல்லவினால் இந்த வரைவு முன்வைக்கப்படவுள்ளது.
பாராளுமன்றத்தில் ஆகக் கூடுதலான ஆசனங்களைப் பெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியினால் கூட்டு அரசு ஒன்று நிறுவப்பட்டுள்ளதால் அரசமைப்பின் 46(4) உறுப்புரையின் பிரகாரம் அமைச்சரவை அமைச்சர்களினது எண்ணிக்கை 48க்கு மேற்படாதவாறு இருத்தல் வேண்டும்.
அத்துடன் அமைச்சரவை உறுப்பினர்கள் அல்லாத அமைச்சர்களினதும், பிரதி அமைச்சர்களினதும் எண்ணிக்கை 45 கு மேற்படாதவாறு இருத்தல் வேண்டும் என முன்வைக்கப்பட்டுள்ள வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாராளுமன்றத்தில் குறித்த தீர்மான வரைவு வாக்கெடுப்புக்கு விடப்பட்டு பெரும்பான்மை பெற்றாலே நிறைவேறியதாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது # அமைச்சர்களின் #எண்ணிக்கையை # தீர்மான வரைவு