தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு தழுவிய போராட்டத்தை இந்திய மருத்துவ சங்கம் இன்று ஆரம்பித்துள்ளது. மருத்துவக் கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கொண்டு வந்த தேசிய மருத்துவ ஆணைய மசோதா மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது இந்திய மருத்துவ சங்கம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவானது, ஏழை மக்களுக்கு, மாணவர்களுக்கு, ஜனநாயகத்துக்கு எதிரானது எனத் தெரிவித்திருந்ததுடன் அதற்கெதிராக ஜூலை 31ம் திகதி காலை 6மணி முதுல் முதல் ஓகஸ்ட் 1ஆம் N திகதி காலை 6 மணி வரை நாடு தழுவிய மருத்துவர்கள் போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக அழைப்பு விடுத்திருந்தது.
இந்த அழைப்பை ஏற்று நாடு முழுவதிலும் இருந்து ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், மருத்துவ வல்லுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது #நாடு தழுவிய #போராட்டத்தை #இந்திய மருத்துவ சங்கம்