வட கொரியா அதன் கிழக்கு கடற்கரையோரம் இரண்டு பொலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது என தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. புதன்கிழமை காலை ஹூடோ தீபகற்பத்தில் இருந்து ஏவுகணை ஏவப்பட்டுள்ளது என தென் கொரியாவின் கூட்டு பணியாளர்களின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
அந்த ஏவுகணை 155 மைல்களுக்கு சென்று, 30 கிமீ உயரத்துக்கு பறந்து ஜப்பான் கடலுக்குள் விழுந்ததாகவும் இதுவரை செலுத்தியதில் இது புதிய வகையான ஏவுகணை என கூட்டு பணியாளர்களின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
எனினும் வட கொரியா இதுகுறித்து எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பதுடன் ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சும் தங்கள் பிராந்தியத்தில் எந்த ஒரு பnhலிஸ்டிக் ஏவுகணையும் வரவில்லை என தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் வடகொரியா. குறைந்த தூரம் செல்லக்கூடிய இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்திருந்தது.
தென் கொரியா மற்றும் அமெரிக்கா கூட்டாக ராணுவ நிகழ்ச்சி ஒன்றை திட்டமிட்டிருந்ததில் ஆத்திரமடைந்த வட கொரியா அந்த சோதனையை நடத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது #வட கொரியா #ஏவுகணை சோதனை #தென் கொரிய