அமைச்சர் றிஸாட் பதியுதீனுக்கும்,மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டே ஆண்டகைக்குமிடையில் இன்று வியாழக்கிழமை(1) காலை மன்னார் ஆயர் இல்லத்தில் விசேட சந்திப்பு இடம் பெற்றது.
-நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினையடுத்து பதவிவிலகயிருந்த றிஸாட் பதியுதீன் மீண்டும் அமைச்சுப்பதவியை பெற்றுக்கொண்ட நிலையில் இன்றைய தினம் மன்னாரிற்கு சென்று மன்னார் ஆயரை சந்தித்து கலந்துரையாடினார்.
அமைச்சருடன்,அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதீன்,மன்னார்,மாந்தை மேற்கு,முசலி பிரதேச சபைகளின் தவிசாளர்கள் ஆகியோரும் கவந்து கொண்டிருந்தனர். ஆயருனான சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த றிஸாட் பதியுதீன் ,
மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி,மன்னார் மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு தொழில் நுற்ப ரீதியிலான தொழில் வாய்ப்புக்களை வழங்குதல், இனங்களுக்கிடையில் சுமூகமான ஒற்றுமை, மாவட்டத்திற்கு தேவையான அடிப்படை தேவைகள், மீனவர், விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆயருடன் கலந்துரையாடப்பட்டது.
மேலும் மாவட்டத்தில் எதிர் காலத்தில் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அண்மையில் நாட்டில் ஏற்பட்ட அனைவருக்கும் வேதனையை ஏற்படுத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களின் பாதிப்பு, அதனுடைய தாக்கம் இன்னும் எல்லோறுடைய உள்ளங்களிலும் வேதனையை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாகவும், எதிர் காலத்திலே இந்த மாவட்டத்தில் கத்தோலிக்க, இந்து,இஸ்ஸாம் ஏனைய மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கான அந்த சூழலை ஏற்படுத்தி சேர்ந்து செயல்பட பல்வேறு நல்ல அலோசனைகளை ஆயர் முன் வைத்தார் என அமைச்சர் றிஸாட் பதியுதீன் மேலும் தெரிவித்தார். #மன்னார் #ஆயர் #றிஸாட் பதியுதீன் #விசேடசந்திப்பு