நாட்டில் உள்ள சகலரும் உறுப்பு தானம் செய்யக்கூடிய வகையில் பிரான்சில் புதிய சட்டம் ஒன்று அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய சட்டம் ஜனவரி முதலாம் முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதன்படி, ஒருவர் தன் உடல் உறுப்புக்களை தானம் செய்ய முடிவெடுத்திருந்தால், அவர் இறந்த பின்னர் அதனை எளிதாக செயல்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறுப்புக்களை தானம் செய்ய விருப்பம் இல்லை என்றால், அவர்கள் அதற்குரிய படிவத்தில் தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யாத அனைவருமே உறுப்பு தானம் செய்பவராகவே கருதப்பட்டு இறந்தபின்னர் அவர்களின் உடல் உறுப்புகள் எடுக்கப்படும் என தெரிவிக்க்பபட்டுள்ளது