Home இலங்கைதேசிய காவல்துறை ஆணைக்குழுவின் தலைவர் பதவி விலக தீர்மானம்

தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் தலைவர் பதவி விலக தீர்மானம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் தலைவர்  பேராசிரியர் சிறி ஹெட்டிகே தமது பதவி விலத் தீர்மானித்துள்ளார். சிறி ஹெட்டிகே தனது  பதவி விலகல்  கடிதத்தை அரசியல் சாசனப் பேரவையிடம் ஒப்படைத்துள்ளார்.

ஜெர்மன் பல்கலைக்கழகமொன்றில் பேராசிரியர் பதவி கிடைத்துள்ள காரணத்தினால் இவ்வாறு பதவியை விலகுவதாக  குறிப்பிட்டுள்ள அவர் எவ்வாறெனினும், தேசிய கவால்துறை ஆணைக்குழுவின் செயற்குழு உறுப்பினராக தொடர்ந்தும் அங்கம் வகிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

தமது  பதவி விலகல்  குறித்து அரசியல் சாசனப் பேரவை இதுவரையில் எவ்வித பதிலையும்  அளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 2015ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் முதல் சிறி ஹெட்டிகே தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் தலைவராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More