Home இலங்கைதிட்டமிட்ட பௌத்த மயமாக்கலைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் அமைதிப் போராட்டம்….

திட்டமிட்ட பௌத்த மயமாக்கலைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் அமைதிப் போராட்டம்….

by admin


இந்து ஆலயங்களில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட பௌத்த மயமாக்கலைக் கண்டித்து யாழ்ப்பாணம் நல்லை ஆதீனம் முன்பாக இன்று காலை அமைதிப் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்து அமைப்புக்களின் ஒன்றியம் சார்பில் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தின் ஒழுங்கமைப்பில் இந்த போராட்டம் மிக அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டது.

நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பிரமச்சாரிய சுவாமிகள் தலைமையில் இந்து அமைப்புகள் ஒன்றியமும் இந்துசமயப் பேரவையும் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பௌத்தர்கள் வாழாத பிரதேசங்களில் விகாரைகள் அமைப்பதனூடாக இலங்கைவாழ் இந்துக்கள் அனைவரும் அச்சத்தில் மூழ்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளரான அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். போராட்டத்தின் முடிவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு கடிதமொன்றும் அனுப்பப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More