Home உலகம்பிலிப்பைன்ஸில் ஐ.எஸ் தீவிரவாத ஆதரவு அமைப்பின் தலைவர் கொலை

பிலிப்பைன்ஸில் ஐ.எஸ் தீவிரவாத ஆதரவு அமைப்பின் தலைவர் கொலை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


பிலிப்பைன்ஸில் ஐ.எஸ் தீவிரவாத ஆதரவு அமைப்பின் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இன்று காலை இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவான தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளை இலக்கு வைத்து ஐ.எஸ் தீவிரவாதிகள் நகர்வதாகவும் அதனை அனுமதிக்கக் கூடாது எனவும் பிலிப்பைன்ஸின் ஜனாதிபதி Rodrigo Duterte தெரிவித்துள்ளார்.

தீவிரவாத குழுவின் தலைவர் மொகமட் ஜபார் மகுடிற் (Mohammad Jaafar MaguidNt  ) இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். தீவிரவாதத் தலைவர் கொல்லப்பட்டதாகவே தாம் திடமாக நம்புவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகவும் தேடப்பட்டு வந்த மொகமட் ஜபார் மகுடிற் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More