காஷ்மீருக்கான 370-வது சட்டப்பிரிவு ரத்துசெய்யப்பட்டதை தொடர்ந்து 2-வது நாளாக ஜம்முவில் கட்டுப்பாடுகள் தொடர்கின்றதனையடுத்து அனைத்து பாடசாலைகளும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு, மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என மத்திய அரசு திங்கட்கிழமை அறிவித்ததைத்தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகள் தொடர்ந்தது. அத்துடன் ஜம்மு மாவட்டத்தில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரசு மற்றும் தனியார் பாடசாலைகளும், கல்லூரிகளும் 2-வது நாளாக மூடப்பட்ட நிலையில் அடுத்த உத்தரவு வரும்வரை முன்னெச்சரிக்கையாக பாடசாலைகளும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு பிராந்தியத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 40 கம்பெனி மத்திய காவல்துறை படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளதுடன் பல பகுதிகளில் ராணுவ வீரர்களும் நிறுத்தப்பட்டுள்ளனார். கைத்தொலைபேசி இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் எந்த பகுதியிலும் இதுவரை அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறவில்லை எனவும் மாநிலத்தில போடப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகளால் சட்டம்-ஒழுங்கு நிலைமை முழு அமைதியுடன் இருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #காஷ்மீர் #கட்டுப்பாடுகள்#பாடசாலைகளும் #யூனியன்