தன்னுடைய பதவிக்காலத்தை நீடிப்பதில்லை என ஜனாதிபதி தன்னிடம் தெரிவித்ததாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர் ஜனாதிபதியின் கருத்திற்கு அமைவாக உரிய நேரத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் கட்டாயமாக நவம்பர் 15 ஆம் திகதிக்கும் டிசம்பர் 7 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட நாளில் நடைபெறும். ஆனால், மாகாண சபைத் தேர்தலை இந்த வருடம் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நடத்துவதாக இருந்தால், உறுதியான தீர்மானத்தை 10 நாட்களுக்குள்ளேயாவது அறிவிக்க வேண்டும். இல்லாவிடின், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக அதனை நடத்த முடியாது.
ஜனாதிபதித் தேர்தலை அடுத்தேனும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு முயற்சிக்கப்படும். மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என தெரிவித்து சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுமாறு அரசியல் கட்சிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார். #ஜனாதிபதிதேர்தலை #உரிய நேரத்தில் #வாய்ப்பு #மஹிந்த தேசப்பிரிய