கொக்குவில் பொற்பதி வீதியில் வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் குழு அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் வீட்டிலிருந்த தளபாடங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்தி அடாவடியில் ஈடுபட்டுத் தப்பிச் சென்றுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றிரவு இரவு 9.30 மணியளவில் நடந்துள்ளது.
பொற்பதி வீதியில் முதலாம் ஒழுங்கையில் உள்ள அரச உத்தியோகத்தரின் குடும்பம் வசிக்கும் வீட்டிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட குழுவே தாக்குதலை நடத்தியதுடன், வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்திவிட்டுத் தப்பிச் சென்றது என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து காவல்துறையினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதேவேளை, யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை சனசமூக நிலையத்தின் ஜன்னல் கதவுகள் மற்றும் இரும்புக் கதவுகள் என்பன நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் அடித்து சேதம் ஆக்கப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் சனசமுக நிலையத்தின் தலைவரினால் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்துறையினர்; மேற்கொண்டு வருகின்றனர். #யாழில் #வீடுடைப்பு #கொக்குவில்
-மயூரப்பரியன்