அமெரிக்கா மற்றும் கியூபாவுக்கிடையே புதிய வணிக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. சுமார் அரை நூற்றாண்டுகளுக்குப் பின்னர் கியூபாவில் இருந்து அமெரிக்காவிற்கு காய்கறிகளின் படிமங்களால் உருவாக்கப்படும் கரியை ஏற்றுமதி செய்ய இரு நாடுகளுக்கும் இடையே வணிக ரீதியிலான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் முதல் கட்டமாக 40 தொன் மரக்கறிகரி ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இந்த ஒப்பந்தம் கியூபா – அமெரிக்கா உறவில் புதிய பாலமாக இருக்கும் என கருதப்படுகிறது.
1959-ம் ஆண்டு அமெரிக்க ஆதரவுடன் கியூபாவில் நடைபெற்றுவந்த ஆட்சியை பிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான கம்யூனிஸ்ட் புரட்சிப்படை கைப்பற்றியதன் பின்னர் இருநாடுகளுக்கும் இடையில் தொடர்பகை நிலவிவந்த நிலையில் அமெரிக்க ஜனதிபதி ஒபாமாவும், கியூபாவின் தற்போதைய ஜனதிபதி; ரவுல் காஸ்ட்ரோவும் செய்த முயற்சியினால் இரு நாடுகளுக்குமிடையே சமரசம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.