லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும் நோக்கத்தில் சென்ற 100 பேர் நடுக்கடலில் வைத்து அந்நாட்டு கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். லிபியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கடாபியின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு அங்கு அதிகாரப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் அங்கு நடைபெறும் உள்நாட்டுப்போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இதனைடுத்து லிபியாவில் வாழும் மக்கள் பலர் ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி சட்ட விரோதமாக கடலில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் பல்வேறு விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதனால் அந்நாட்டு கடற்படையினர் தங்கள் கடல் எல்லைகளில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், லிபியாவின் கிழக்கு பகுதியில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு சட்ட வீரோதமாக செல்ல முயன்ற 100 அகதிகளை உள்நாட்டு கடற்படையினர் நடுக்கடலில் மீட்டுள்ளனர்.
இந்த தகவலை இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
சீரான மற்றும் சாதகமான வானிலை காரணமாக லிபியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு சட்டவீரோதமாக கடலில் பயணிக்கும் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்ற நிலையில் அண்மையில் லிபியாவிலிருந்து ஐரோப்பா செல்லும் நோக்கில் சென்ற அகதிகள் படகு கவிழ்ந்த விபத்தில் 150 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது #லிபியா #நடுக்கடலில் #அகதிகள் #மீட்பு