காஷ்மீர் நடவடிக்கையால் கடும் ஆத்திரமடைந்துள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத குழுவினர் இந்தியாவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்ததுடன், அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசமாக பிரித்ததைக்கு ஜம்மு காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் ஜம்மு காஷ்மீரில் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக ராணுவம் குவிக்கப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது . அத்துடன் இந்தியாவின் நடவடிக்கைக்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ள பாகிஸ்தான் இந்த விவகாரத்தை ஐ.நா. சபையின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளது.
இந்நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத் குழுக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அத்துடன் காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை முசாபராபாத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஜம்மு காஷ்மீரின் பிரிவினைவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த பலர் பங்கேற்றிருந்த நிலையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். #பாகிஸ்தான் #ஆதரவு #தீவிரவாத #இந்தியா #எச்சரிக்கை