Home பிரதான செய்திகள்இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரி

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரி

by admin

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்டுவந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து புதிதாக தலைமை பயிற்சியாளரை தெரிவு செய்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது.

இதனையடுத்து ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களை கபில்தேவ் தலைமையிலான தெரிவுக்குழுவினர் ஆய்வு செய்த நிலையில் ரவி சாஸ்திரி, மைக் ஹெஸ்சன், டொம் மூடி உள்பட 6 பேரின் இறுதிப் பட்டியலை தயாரித்து அவர்களிடம் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டது

இறுதியில் ரவிசாஸ்திரியை தலைமை பயிற்சியாளராக தெரிவு செய்துள்ளதாக கபில்தேவ் தெரிவித்துள்ளார். ரவி சாஸ்திரி 2021 வரை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. #இந்தியகிரிக்கெட்  #தலைமைப்பயிற்சியாளராக   #ரவி சாஸ்திரி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More