அமெரிக்காவில் உள்ள அலபாமா பல்கலைகழகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். அலபாமா மாகாணத்தின் தலைநகரான மாட்கோமரி நகரில் அமைந்துள்ள அலபாமா மாநில பல்கலைக்கழகத்திற்கு அருகில் சென்ற இனந்தொழயாத நபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைக்கொண்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிக் பிரயோகம் மேற்கொண்டார்.
இந்த தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர்களை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதையடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பி சென்ற நபரை தீவிரமாக தேடிவருவதாக அமெரிக்க காவல்துறையினர்; தெரிவித்துள்ளனர். #அமெரிக்கா #பல்கலைகழகத்திற்கு #துப்பாக்கிச்சூடு #பலி #அலபாமா