ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபுல் நகரில் நேற்றிரவு 1,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் சுமார் 63க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் 182 பேர் காயம் காயமடைந்து உள்ளனர். விருந்தின்போது இசைக் கச்சேரி நடத்தப்பட்டுக் கொண்டிருந்த மேடையருகே இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது
காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என அதிகாரிகள தெரிவித்துள்ளனர்
ஆப்கானிஸ்தானில் கடந்த 18 வருடங்களுக்கும் மேலாக தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் அங்கு சமாதானத்தினை ஏற்படுத்தும் நோக்குடன் அமெரிக்க அரசு பேச்சுவார்த்தை நடத்திவருகிறது என்புது குறிப்பிடத்தக்கது. #ஆப்கானிஸ்தான் #குண்டுவெடிப்பு #பலி #திருமண நிகழ்ச்சி