குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு புனர்;வாழ்வு அளிக்கப்பட்டதனைப் போன்றே, இராணுவத்திற்கும் புனர்;வாழ்வு அளிக்கப்பட வேண்டுமென நல்லிணக்க பொறிமுறைமை குறித்த செயலணி பரிந்துரை செய்துள்ளது.
வடக்கில் நிலை கொண்டுள்ள இராணுவப் படையினருக்கும் கிரமமான அடிப்படையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு ஒவ்வொரு படைப்பிரிவாக அகற்றப்பட வேண்டுமென பரிந்துரை செய்துள்ளது.
இலங்கையின் வரலாற்றில் படையினருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டுமென முதல் தடவையாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என கொழும்பு ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த யோசனையானது படையினரை இழிவுபடுத்தும் வகையிலானது எனவும், மிலேச்சத்தனமான குற்றச் செயல்களில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகளையும் படையினரையும் ஒப்பீடு செய்ய முடியாது எனவும் பெயர் குறிப்பிட விரும்பாத உயர் பாதுகாப்பு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.