பெருவில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வரலாற்றில் இல்லாத மிகப்பெரிய அளவு குழந்தைகளின் எச்சங்களை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஐந்து முதல் 14 வயதுக்குட்பட்ட 227 சிறுவர்களின் எச்சங்களே இவ்வாறு பெருவின் தலைநகர் லிமாவுக்கு வடக்கே உள்ள கடலோர நகரமான {ஹவான்சாகோ அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த குழந்தைகள் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட இந்த சிறுவர்களின் எச்சங்களில் சிலரது முடி மற்றும் தோல் புதைக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுவதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடமும் இந்தநாட்டின் இருவேறு பகுதிகளில் 200 குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டதற்கான தடயங்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன. #பெரு #சிறுவர்களின் #எச்சங்கள் #மீட்பு