கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அணியின் தலைவராக செயல்பட்ட சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை வெளியேற்ற முடிவு செய்துள்ளது
தமிழகத்தைச் சேர்ந்த இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான அஸ்வின் கடந்த இரண்டு ஐபிஎல் தொடர்களின் போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவராக செயல்பட்டார். எனினும்இரண்டு முறையும் இவரால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் 2020க்கான தொடரின் போது அஸ்வினை வெளியேற்ற முடிவு செய்துள்ளது.
அதேவேளை கேஎல் ராகுலை அணித்தலைவராக நியமிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் அஸ்வினை வாங்க டெல்லி அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் முயற்சிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது #கிங்ஸ் லெவன் #அஸ்வின் #ஐபிஎல்