Home இந்தியாபெங்களூரில் 3 மாடி கட்டடம் இடிந்து விபத்து- ஏராளமானோர் சிக்கியுள்ளதாக அச்சம்:-

பெங்களூரில் 3 மாடி கட்டடம் இடிந்து விபத்து- ஏராளமானோர் சிக்கியுள்ளதாக அச்சம்:-

by admin

பெங்களூரில் மூன்று அடுக்கு மாடிக்கட்டம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டுமானப் பணியின் விபத்து நேரிட்டதால் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்றுவருகிறது. பெங்களூருவின் வொயிட் ஃபில்ட் பகுதியில் மூன்று அடுக்கு மாடிக் கட்டடம் கட்டுமானப் பணி நடைபெற்றது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இன்று காலை இந்தக் கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் மற்றும் அவசர சேவைகள் பிரிவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் பல தொழிலாளர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More