கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அமெரிக்க ஒபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ரச வீழ்த்தி அறிமுக போட்டியிலேயே கனடாவின் இளம் வீராங்கனை பியான்கா அன்ட்ரீஸ்கு சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார்.
இறுதிப்போட்டியில் செரீனா வில்லியம்சும் பியான்கா அன்ட்ரீஸ்குவும் போட்டியிட்டநிலையில் பியான்கா 6-3, 7-5 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார்.
அறிமுக போட்டியிலேயே கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதித்த 19 வயதான வீராங்கனை பியான்கா கனடாவில் இளம் வீராங்கனைகளில் 2009-க்கு பின்னர் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் வீராங்கனை என்ற பெருமையையும் பியான்கா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அமெரிக்க ஓபன் டென்னிஸ் – அறிமுக போட்டியிலேயே சம்பியன் கிண்ணத்தினை பியான்கா கைப்பற்றியுள்ளார். #அமெரிக்க #அறிமுக #சம்பியன் #பியான்கா #செரீனா