அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்று வந்த கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ரபேல் நடால் நான்காவது முறையாக சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் ஆகியோருக்கிடையில் போட்டி நடைபெற்ற நிலையில் நடால் -5, 6-3, 5-7, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் ; வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார்.
இதன்மூலம் 19-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றியுள்ள நடால் அமெரிக்க ஓபனில் 4-வது முறையாக சம்பியன் பட்டம் வென்றுள்ளார். இன்னும் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றால், ரோஜர் பெடரின் உலக சாதனையை சமன் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது
தற்போது 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களுடன் பெடரர் முதலிடத்திலும் 16 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் நோவக் ஜோகோவிச் 3வது இடத்திலும், 14 பட்டங்களுடன் பீட் சாம்ப்ராஸ் 4வது இடத்திலும் உள்ளனர். #அமெரிக்கஓபன்டென்னிஸ் #நடால்