Home இலங்கைசவேந்திர சில்வாவின் நியமனத்தில் வெளிச்சக்திகள் தலையிட முடியாது…

சவேந்திர சில்வாவின் நியமனத்தில் வெளிச்சக்திகள் தலையிட முடியாது…

by admin

இலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை இலங்கையின் உள்விவகாரம் என ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஏஎல்ஏ அசீஜ் தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்விலேயே  கருத்து வெளியிட்டுள்ள அவர், குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சவேந்திரசில்வாவின் நியமனம் குறித்து சில நாடுகள் கரிசனை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய இராணுவதளபதியாக சவேந்திரசில்வாவை நியமிப்பது என்பது இலங்கையின் ஜனாதிபதி எடுத்த தீர்மானம் என  குறிப்பிட்ட அவர், இலங்கையின் பொதுச்சேவை பதவி உயர்வுகள் தொடர்பான உள்ளக நிர்வாக நடைமுறைகள் மீது வெளிச்சக்திகள் செல்வாக்கு செலுத்த முயல்வது தேவையற்றது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வலியுறுத்தி உள்ளார்.

குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து இந்த நியமனம் தொடர்பில் இலங்கையின் சில தரப்பினரும்,  சர்வதேச அமைப்புகளும் கரிசனைகளை வெளியிட்டுவருவது கவலையளிப்பதாகவும்,  இயற்கை நீதி தொடர்பான கொள்கைகளிற்கு இது  முரணானது எனவும் இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஏஎல்ஏ அசீஜ்  தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More