குறுகிய காலத்தில் வடகொரியாவுக்கு பயணம் செய்ய விருப்பம் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். அணு ஆயுத பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது குறித்து பேசுவதற்கு வடகொரியா வருமாறு அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்ததாக தென்கொரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இது குறித்து வெள்ளைமாளிகையில் டிரம்பிடம் பத்திரிகையாளர்கள் நேற்று கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அதற்கு பதில் அளித்த போதே டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே நட்புறவு நீடிக்கிறது எனவும் எனினும் அது குறித்து தான் கருத்து கூற விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ள அவர் குறுகிய காலத்தில் வடகொரியாவுக்கு பயணம் செய்ய விருப்பம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
எனினும் எதிர்காலத்தில் அப்போதுள்ள சூழ்நிலையைப் பொறுத்து வடகொரியாவுக்கு நிச்சயம் பயணிப்பேன் எனவும் கிம் ஜாங் உன்னும் அமெரிக்கா வர விரும்புவார் என தான் நம்புவதாகவும் இதனை நோக்கி செல்ல இன்னும் சில காலம் வேண்டி இருக்கிறது எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். #வடகொரியா#டிரம்ப்