பிரித்தானிய நாடாளுமன்றத்தை ஐந்து வாரங்களுக்கு இடைநிறுத்துவதற்கான பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் தீர்மானம் சட்ட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஒக்ரோபர் 31 ஆம் திகதி பிரெக்ஸிற் காலக்கெடுவுக்கு முன்னதாக நாடாளுமன்றம் தனது கடமைகளை நிறைவேற்றுவதை நிறுத்துவது தவறு என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தற்போது பரிசீலித்து வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரித்தானிய ஜனநாயகத்தின் அடிப்படைகளில் நாடாளுமன்றத்தை இடைநிறுத்துவதற்கான முடிவின் தாக்கம் தீவிரமானது எனவும் நாடாளுமன்றத்தை இடைநிறுத்துவது தொடர்பாக மகாராணிக்கு ஆலோசனை வழங்குவதற்கான முடிவு சட்டவிரோதமானது எனவும் தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் தலைவர் லேடி ஹேல் சுட்டிக்காட்டியுள்ளார்.