Home இந்தியாசுவாமி சின்மயானந்த் மீது பாலியல் முறைப்பாடு செய்த மாணவியும் சிறையில்

சுவாமி சின்மயானந்த் மீது பாலியல் முறைப்பாடு செய்த மாணவியும் சிறையில்

by admin


தன்னை பாலியல் வல்லுறவு செய்ததோடு, பாலியல் தாக்குதலும் தொடுத்தாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்த் மீது முறைப்பாடு செய்து அவர் கைது செய்யப்படுவதற்கு காரணமாக இருந்த சட்டக்கல்லூரி மாணவியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆபாசக் காணொளிகளை வெளியிடாமல் இருக்க, குறித்த மாணவி அவரது நண்பர்களோடு இணைந்து 5 கோடி ரூபாய் தர வேண்டுமென சுவாமி சின்மயானந்துக்கு மிரட்டல் விடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதனையடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதன்கிழமை காலை உள்ளூர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட இந்த மாணவி, பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டார் எனவும் மருத்துவ பரிசோதனையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட மாணவியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

உத்தர பிரதேசத்தில்சின்மயானந்த் நடத்தி வந்த சட்டக்கல்லூரியில் பயின்ற மாணவி, அவர் மீது பாலியல் முறைப்பாடு கொடுத்ததன் பேரில் சின்மயானந்த் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது #சுவாமிசின்மயானந்த்  #முறைப்பாடு #மாணவி #சிறையில்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More