Home பிரதான செய்திகள்கிரிக்கெட் வீரர் டோனி இந்திய ஜனாதிபதி வாழ்த்து…

கிரிக்கெட் வீரர் டோனி இந்திய ஜனாதிபதி வாழ்த்து…

by admin

கிரிக்கெட் உலகில் ராஞ்சிக்கு பெருமை சேர்த்தவர் டோனி என இந்திய  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டியுள்ளார். ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி பல்கலைக்கழகத்தில் 33-வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கிரிக்கெட் உலகில் ராஞ்சிக்கு பெருமை சேர்த்தவர் டோனி என்று புகழாரம் சூட்டினார். அதைத்தொடர்ந்து அவர் பேசுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மரியாதை நிமித்தமாக டோனி தன்னை சந்தித்தார். அது மகிழ்ச்சியை தந்தது. தான் அவரிடம், “பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும், உங்கள் அதீத திறமையால் மக்கள் உங்கள் மீது அன்பு செலுத்துகிறார்கள்” எனக் கூறியதாக குறிப்பிட்டு்ளார். மேலும் அவர், ஜார்கண்ட் மாநிலத்தின் பிரபலமானவர்களின் சாதனைகளையும் நினைவு கூர்ந்தார்.

குறிப்பாக 1928-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுக் கொடுத்த  ஹொக்கி அணியின் தலைவர்  ஜெயபால் சிங் முண்டா, வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி ஆகியோரின் சாதனையையும் எடுத்துரைத்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More