Home இந்தியாஉமா மகேஸ்வரி கொலை வழக்கு – குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது…

உமா மகேஸ்வரி கொலை வழக்கு – குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது…

by admin

சென்னை அருகே பெண் பொறியியலாளர் உமா மகேஸ்வரி பாலியல் வன்புணர்விற்குப் பின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதானவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை  உச்ச நீதிமன்றம்  உறுதி செய்தது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதுடைய  பெண் பொறியியலாளர்  உமா மகேஸ்வரி  சென்னையை அடுத்த சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ந் தேதி பணிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கேளம்பாக்கம் காவற்துறையில்  அவரது தந்தை பாலசுப்பிரமணியன் முறைப்பாடு செய்தார்.

இதனைத்தொடர்ந்து பெப்ப்ரவரி 22-ந் தேதி சிப்காட் வளாகத்தில் உள்ள முட்புதரில் உமா மகேஸ்வரி பிணமாக மீட்கப்பட்டார். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. விசாரணையில், மேற்கு வங்காளத்தை சேர்ந்த 23 வயதுடைய உஜ்ஜல் மண்டல், உத்தம் மண்டல், ராம் மண்டல்  ஆகியோர் உமா மகேஸ்வரியை பாலியல் வன்புணர்ந்து கொலை செய்தமை தெரியவந்தது. மேலும், அவரிடம் இருந்த கைத்தொலைபேசி, கிரெடிட் கார்ட் ஆகியவற்றை அவர்கள் திருடிச் சென்றதும் கண்டறியப்பட்டது.

இதனையடுத்து உஜ்ஜல் மண்டல் உள்பட 3 பேரையும் காவற்துறையினர்  கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு செசன்சு நீதிமன்றம் 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து 3 பேரும் சென்னை உயர் நீதிமன்றில்  மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உஜ்ஜல் மண்டல் உள்பட 3 பேருக்கும் செங்கல்பட்டு செசன்சு நிதிமன்றம்  விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. இந்தநிலையில் சென்னை உயர் நீதிமன்ற  தீர்ப்பை எதிர்த்து உஜ்ஜல் மண்டல் சார்பில் உச்ச நீதிமன்றில்  மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு நேற்று உச்ச நீதிமன்றில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. தமிழக அரசு தரப்பில் அரச சட்டத்தரணி  யோகேஷ் கன்னா முன்னிலையாகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றம்  வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More