ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ, வைத்திய பரிசோதனைக்காக, சிங்கபூர் செல்வதற்கு நீதிமன்றத்திடம் அனுமதிக்கோரியுள்ளார். ஒக்டோபர் 9ஆம் திகதி முதல் ஒக்டோபர் 12ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலேயே சிங்கபூருக்குச் செல்வதற்கு அனுமதிகோரியுள்ளார்.
டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகம் நிர்மாணத்தின் போது, நிதி மோசடி செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், கோத்தாபய ராஜபக்ஸவின் கடவுச்சீட்டு, தடைச்செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை டீ.ஏ. ராஜபகஸ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோத்தாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட வழக்கு ஒக்டோபர் 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.