ஜம்மு காஷ்மீரில் ஒருமுறை வளர்ச்சி தொடங்கினால் பாகிஸ்தானின் 70 ஆண்டு திட்டங்கள் தவிடுபொடியாகும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா சென்று திரும்பிய நிலையில், வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றினார்.
அதன்போது, காஷ்மீரில் தற்போது இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்தி இந்திய எதிர்ப்பு சக்திகளை அணிதிரட்டும் முயற்சியை தடுக்கும் நோக்கத்தில் செல்போன் நெட்வொர்க் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலம் வளர்ச்சிப் பாதைக்கு மாறும்போது எந்த உயிரிழப்பும் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்வதற்கே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.