தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராமின் மரணம் குறித்த மனு மீது பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மர்மமான முறையில் இறந்துள்ளார் எனவும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் அவரது மரணம் குறித்து பொதுமக்கள் மத்தியில் சந்தேகங்கள் உள்ளதால் இது குறித்து விசாரிக்க உச்சநீதிமன்ற ஓய்வுப்பெற்ற நீதிபதிகள் 3 பேர் தலைமையில் குழு அமைக்கவேண்டுமென சென்னை உயர்நீதிமன்றித்தில் அ.தி.மு.க. தொண்டர் ஜோசப் என்பவரால் தொடரப்பட்ட பொதுநல வழக்கு உட்பட்ட வழக்குகள் இன்றையதினம் விசாரணைக்கு வந்த வேளையிலேயே உயர்நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.
அப்பல்லோ மருத்துவனை நிர்வாகம் சார்பில் முன்னலையான சட்டத்தரணி பி.எஸ்.ராமன், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த விவரங்கள் அனைத்தும் தங்களிடம் தயாராக உள்ளதாகவும் அந்த விவரங்களை சீலிட்ட உறையில் தாக்கல் செய்ய தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற பெப்ரவரி 23ம் திகதிக்கு ஒத்திவத்த நீதிபதிகள் தமிழக அரசு பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.