Home இந்தியாமீண்டும் சிதம்பரம் கைது

மீண்டும் சிதம்பரம் கைது

by admin

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பில் திகார் சிறையில் உள்ள ப சிதம்பரத்தை அமுலாக்கத்துறை கைது செய்துள்ளது.  ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு புகார் தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சிபிஐ மற்றும் அமுலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற நிலையில் சிபிஐ வழக்கில் சிதம்பரம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் விசாரணை நடத்த அனுமதி கேட்டு அமுலாக்கத்துறை சார்பில் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, திகார் சிறைக்கு சென்று ப.சிதம்பரத்தை விசாரிக்க அமுலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையை தொடந்து தேவைப்பட்டால் அவரை கைது செய்யவும் அமுலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து இன்று காலை திகார் சிறைச்சாலைக்கு அமலாக்கத்துறையின் 3 அதிகாரிகள் சென்று . அங்கு ப.சிதம்பரத்திடம் ஐஎன்எக்ஸ் முறைகேடு மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தியதன் பின்னர் அவரைக் கைது செய்துள்ளனர்

ப.சிதம்பரத்திடம் அமுலாக்கதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தப்படும் நிலையில், அவரது மகன் கார்த்தி சிதம்பரம், மனைவி நளினி ஆகியோர் சிறைக்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது #மீண்டும்  #சிதம்பரம் #கைது  #ஐஎன்எக்ஸ்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More